54ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கோவா மிகவும் சிறப்பு பெற்றது. பிரான்ஸ் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மிக முக்கியமான படைப்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். மேலும் பலரது கண்ணில் படாத சிறந்த படங்கள் மற்றும் இயக்குனர்களுக்கு இங்கு சரியான அங்கீகாரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.