தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இதில் தனக்கு குறைவான வசனங்களே உள்ளதாக விக்ரம் ஏற்கனவே கூறியிருந்தார். இதனை தொடர்ந்து படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய விக்ரம் அதன் மொத்த வேலைகளையும் ஒரு மணி நேரத்தில் முடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.