“Thug life “, என்பது அச்சமற்ற மற்றும் எதையும் எதிர்க்கும் மனப்பான்மையுடையவர்கள். இந்த சொல்  இந்தியா உட்பட, உலகின் பல பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சொல்லாக பார்க்கப்படுகிறது.  அதே போல் மேற்கத்திய நாடுகளில் மோசமான செயல்களில் ஈடுபடுபவர்களையும் இந்த சொல்  குறிக்கிறது. “தாக்” என்ற வடமொழிச் சொல் “thug ” என்ற வார்த்தையாக பின்னாளில் மாறியதாக நம்பப்படுகிறது.

“Thug Life” என்பதன் சாராம்சம் ஒன்றுமில்லாமல் பூஜ்யத்தில் வாழ்க்கையை தொடங்கி உயர்ந்த இடத்திற்கு செல்லும் நபரை குறிக்கிறது.  இந்த சக்திவாய்ந்த தீம் தற்போது திரைப்படமாக உள்ளது. அதன்படி, இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில்  உலகநாயகன்  கமல்ஹாசன் வெளியாகவுள்ள KH 234க்கு “thug life” என பெயரிடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக இந்த பெயர் தற்போது இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.