பிரபல நடிகை கங்கனா ரனாவத், அவரது சமீபத்திய தொடர் 10 படங்கள் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்ததால், அவர் மன வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவரது மிக சமீபத்திய வெளியீடான , “தேஜஸ்” எதிர்பார்த்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறத் தவறியது, அவரது தொடர்ச்சியான பின்னடைவுகளில் “சந்திரமுகி 2,” “தாகத்,” “தலைவி, “ஜட்ஜ்மெண்ட்  ஹே கியா,” “சிம்ரன்,” “ஐ லவ் நியூயார்க்,” உள்ளிட்ட அவரது முந்தைய 10 படங்களும்  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது. 

இருப்பினும், இப்போது அனைவரின் பார்வையும் அவரது வரவிருக்கும் திரைப்படமான “எமர்ஜென்சி” மீது உள்ளது, அப்படத்தில்  கங்கனா,  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதையை மையமாக வைத்து நடித்துள்ளார். இப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.