IPL 2026 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றிய பிறகு, மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா தனது இளம் மகனுடன் மைதானத்தில் விளையாடிய காட்சிகள் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளன.

மேலும் வெற்றியின் மகிழ்ச்சியில் திளைத்திருந்த க்ருனால், தரையில் சிதறிக் கிடந்த காகிதத் துகள்களைக் கொண்டு தனது மகனைப் பின்தொடர்ந்து விளையாடியது, மைதானத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்தது. இந்தக் கொண்டாட்டங்களின் மற்றொரு சிறப்பம்சமாக, விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் க்ருனால் பாண்டியாவின் மகனுடன் அன்பாகப் பழகிய தருணங்கள் அமைந்தன.

“>

இந்நிலையில் தனது நீண்ட கால கனவான ஐபிஎல் கோப்பையை வென்ற உணர்ச்சியில் இருந்த விராட் கோலி, அந்தக் குழந்தையை அரவணைத்து மகிழ்ந்தார். மேலும், கோலியும் அனுஷ்காவும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட அந்த உணர்ச்சிகரமான கட்டிப்பிடித்த தருணம், சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.