சமீபகாலமாக உடல்நலனில் அக்கறை கொண்டவர்கள் வீட் கிராஸ் எனப்படும் கோதுமை புல் வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், உள்ளூர் வணிக வளாகம் ஒன்றில் ஆரோக்கியத்திற்காக கோதுமை புல் தொட்டியை வாங்கி வந்த பெண்ணுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டிற்கு வந்த பிறகு அந்தச் செடித் தொட்டியிலிருந்து வினோதமான சத்தம் கேட்டதைக் கண்டு சந்தேகமடைந்த அவர், தொட்டியைச் சோதித்தபோது உள்ளே எலி ஒன்று தனது குட்டிகளுடன் கூடு கட்டி வாழ்வதைக் கண்டு திகைத்துப் போனார். வணிக வளாகத்தின் நர்சரியில் இருந்தபோது அந்த எலி குடும்பம் செடிக்குள் தஞ்சமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை அந்தப் பெண் சமூக வலைதளங்களில் பகிரவே, “கோதுமை புல்லுடன் எலிக்குட்டியும் இலவசமா?” எனப் பலரும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நர்சரிகளில் இருந்து செடிகளை வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
