இயற்கையின் விந்தைகளில் ஒன்றான ‘கல் மீன்’ எனப்படும் உலகின் மிக ஆபத்தான விஷ மீனைப் பெண் ஒருவர் வெறும் கைகளால் அலட்சியமாகக் கையாண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தோ-பசிபிக் கடல் பகுதிகளில் காணப்படும் இந்த மீன்கள், ஒரு சாதாரணக் கல்லைப் போன்ற தோற்றத்தைக் கொண்டு பாறைகளுக்கிடையே மறைந்து வாழும் திறன் கொண்டவை. ஆழமற்ற நீரில் மறைந்திருந்த ஒரு மீனை அந்தப் பெண் எவ்வித அச்சமுமின்றி கையில் எடுத்துத் தனது உள்ளங்கையில் வைத்து விளையாடுகிறார்.
ஒரு சிறிய தவறு நேர்ந்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருக்கும் அல்லது உறுப்புகள் செயல் இழந்திருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மீனின் முதுகெண்ணெய்களில் உள்ள 13 முட்கள் வழியாக ‘நியூரோடாக்ஸிக்’ எனும் மிகக் கொடிய விஷம் உடலில் பாயும். இந்த விஷம் பாம்பின் விஷத்திற்கு இணையான வீரியம் கொண்டது. இது உடலில் ஏறியவுடன் கடுமையான வலி, பக்கவாதம் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் சில மணி நேரங்களிலேயே மரணத்தைத் தழுவச் செய்யும்.
<a href=”http://
Meet the Estuarine Stonefish (Synanceia horrida) – one of the world’s most venomous fish! 🐟💀
This master of camouflage blends perfectly into muddy estuaries and rocky reefs, looking just like a warty rock.
But don’t be fooled: its 13 dorsal spines pack a deadly punch,… pic.twitter.com/WFHM3F8gOc— Dreams N Science (@dreamsNscience) December 24, 2025
“>
இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “தைரியத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது” என்றும், இத்தகைய விபரீதச் செயல்கள் உயிருக்கே விலை பேசும் எனவும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, கடல் வாழ் உயிரினங்களைக் கையாளும் போது கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது.
