மகாராஷ்டிரா மாநிலம், பன்வெல் தாலோஜாவில் உள்ள ரியான்ஷ் பார்ம்ஹவுஸ் கழிவறையில் ஸ்பை கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பெண் விருந்தினர் இதை கவனித்து, உரிமையாளர் மனோஜ் சவுத்ரியை எதிர்கொண்டார். அவர் மொபைலில் பெண்களின் தனிப்பட்ட வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
பெண் குடும்பத்தினரிடம் சொல்ல, அவர்கள் தாலோஜா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து மனோஜை கைது செய்தனர். அவரது போனில் பல ஆபாச வீடியோக்கள் இருந்ததால், இது தொடர்ச்சியாக நடந்திருக்கலாம் என தெரிகிறது.
மனோஜ் மீது தனியுரிமை மீறல், ஆபாசப் பொருட்கள் பரப்பியது போன்ற குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பார்ம்ஹவுஸ் மேலாளரும் பொறுப்பின்மைக்காக கைது செய்யப்பட்டார். வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர்.
