நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகளான பிரித்திகா ஸ்ரீ (வயது 7), அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த தெருநாய் ஒன்று தாக்கியது.

அந்த நாய் சிறுமியின் முகத்தை குறிவைத்து கடித்து தாக்கியுள்ளது. சிறுமியின் வாய், மூக்கு பகுதிகளில் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவத்தை பார்த்த அப்பகுதியினர் விரைந்து நடந்து வந்து, நாயை விரட்டி உதவினார். பின்னர் உடனடியாக சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அயன்சிங்கம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற பொதுமக்கள் கடும் கோபம் தெரிவித்துள்ளனர்.