பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகள், தங்களுக்குத் தாவரவியல் மற்றும் இசை பாடங்களை கற்பிக்கும் 2 ஆசிரியர்கள் உடல்ரீதியாக இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறியுள்ளார்கள்.
“அவர்கள் எங்கள் உடலில் அனுமதி இல்லாமல் கை வைக்கிறார்கள். இது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருக்கவேண்டும் என்று பயமுறுத்துகிறார்கள்” என அவர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வெளியிட்ட வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்வையும், ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது. சம்பவம் குறித்து போலிஸார் மற்றும் கல்வித் துறை விசாரணை தொடங்கி உள்ளனர்.
#WATCH | Another shocking incident of sexual harassment has surfaced in #Pollachi with students from a Pollachi school accusing multiple teachers of sexual harassment, misbehavior, and misconduct. While they have specifically complained about the botany and music teachers, they… pic.twitter.com/9SnzDCRjbl
— The Federal (@TheFederal_News) August 22, 2025
“>
