தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் சுற்று பயணத்தை ஒத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் அதனை தொடங்கியுள்ளார். நாளை ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் டிசம்பர் 30ஆம் தேதி நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாகவும் அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.