தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று அனல் பறக்க நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
பொதுவாகவே தனது அதிரடியான பேச்சுகளால் ட்ரெண்டிங்கில் இருக்கும் பிடிஆர், இன்று வாக்குச் சாவடிக்கு வரும்போது தனது கையில் மல்லிகைப்பூவைச் சுற்றிக்கொண்டு வந்து புதிய ஸ்டைலில் மாஸ் காட்டினார்.
இதைப் பார்த்த செய்தியாளர்கள் ஆர்வமுடன் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, “நான் ஒரு அசல் மதுரைக்காரன், அதனால்தான் கையில் மல்லிகைப்பூ கட்டியுள்ளேன்” என்று சிரித்தபடியே பதிலளித்தார்.
மதுரையின் அடையாளமான மல்லிகைப்பூவை ஒரு அமைச்சரே கையில் கட்டி வந்து வாக்களித்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும், தவறாமல் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
