மும்பை மாநகரம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு பரபரப்பான நகரம். அங்குள்ள மின்சார ரயில்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் இயங்குபவை. ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்த வேகமான நகரத்திலும் இன்னும் மனிதாபிமானம் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது.

ஓம் திரிபாதி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு முதியவர் கைத்தடியுடன் மெதுவாக நடந்து வந்து நகர்ந்து கொண்டிருந்த ரயிலைப் பிடிக்க முயல்கிறார். அதைக் கவனித்த ரயில் ஓட்டுநர், மனிதாபிமானத்துடன் ரயிலை நிறுத்தி, அவர் பாதுகாப்பாக ஏறும் வரை பொறுமையாக காத்திருந்தார்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோவை இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “மனிதாபிமானம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மும்பை ரயில்களில் இது போன்ற பல சம்பவங்கள் நடப்பதாகப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Om Tripathi (@life_is_trains)

“>

ரயிலை ஒரு சில நொடிகள் நிறுத்துவதால் யாருக்கும் பெரிய இழப்பில்லை, ஆனால் அந்த முதியவருக்கு அது மிகப்பெரிய உதவியாக அமைந்தது எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.