நம்முடைய வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றது. பொதுவாக, சிவப்பு நிறம் என்பது ஆபத்தைக் குறிக்கும். ஆபத்து உள்ள இடங்களில் சிவப்பு துணி அல்லது பலகை பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், கேஸ் சிலிண்டரும் ஆபத்தான ஒன்று தான். ஏனெனில் அதில் எரியக்கூடிய வாயு இருக்கிறது.

கொஞ்சம் நாம் கவனமாக இல்லாவிட்டாலும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் சிவப்பு நிறம் கேஸ் சிலிண்டருக்கு குறிகாட்டியாக பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு நிறம் எந்த தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.