செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அனைவருக்கும் காலை நேர வணக்கம். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள்ளாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.  இல்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நாங்கள் அறிவித்திருந்தோம். சுதந்திர தின கொடியேற்றி நிகழ்வின் போது…  மதுவிலக்கு குறித்து..  தமிழக முதலமைச்சர் அவர்கள் நிச்சயமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்துவது குறித்து நல்ல வரவேற்கத்தகுந்த அறிவிப்பை தெரிவிப்பார் என்று நம்புகிறோம்.

பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து எவ்விதமான வரவேற்பு வரவில்லை என்று சொன்னால் நிச்சயமாக அதற்கு பிறகு ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி…  தமிழகத்தில் மது உற்பத்தி செய்யக்கூடிய 19 மதுபான ஆலைகளை நிரந்தரமாக மூடக்கூடிய வகையில் 5,362 டாஸ்மார்க் கடைகள் மூடக்கூடிய வகையில் மிகப்பெரிய போராட்டம் அறிவிப்பது குறித்து  அறிவிக்கப்படும்.

ஏற்கனவே தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெற்றுக் கொண்டு வந்த மதுபார்களை மூடிட வேண்டும். அதன் மூலமாகத்தான் ஒரு லட்சம் கோடி ரூபாய் மேலாக ஊழல் நடைபெறுவது என்று நாங்கள் சுட்டிக் காட்டிய பிறகு….  ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்கள் மூடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் திருமண மண்டபங்களில்… அதேபோல விளையாட்டு அரங்குகளில் மதுபானம் விற்பதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிதத்ததை அடுத்து  அரசு கைவிட்டது.

ஆனால் இப்பொழுது மெல்ல மெல்ல தமிழகத்தில் மதுபான கடைகளினுடைய எண்ணிக்கையை வேறு விதங்களிலே கூட்டுவதற்கும் நிகராக சில அறிவிப்புகளையும் இந்த அரசு அவப்பொழுது வெளியிடுகிறது. அதனுடைய மர்மம் என்ன என்று புரியவில்லை ? கடந்த பத்தாம் தேதி அன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை செயலாளர் திரு. ரத்னா அவர்கள் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை அருகாமையில் இருக்கக்கூடிய தபா – உணகங்களிலும்,  வேறு உணவகங்களிலும் மது விற்பனை நடைபெறுவதாகவும் , அது சட்டவிரோதம் என்றும் அறிவித்து அந்த கடைகள் அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு நேர் எதிராக ஆணையாகும்.

சட்டவிரோதமாக டாஸ்மார்க் சில்லறை விற்பனை கடையை தவிர வேறு எங்கு நடைபெற்றாலும்…  அந்த விற்பனையை தடை செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. அதை விடுத்து ஹோட்டல்களில் சிறுசிறு உணவகங்களிலும் அனுமதி பெற்று மது விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லுவது…   ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 500 கடைகளை மூடிவிட்டு,  இப்பொழுது வீதி எங்கும்…  பெட்டி கடைகளிலும்…  மளிகை கடைகளிலும்…. சில்லறை விற்பனையை  அதிகரிப்பதற்கு உண்டான தீய நோக்கமாகவே இதை கருத வேண்டி இருக்கின்றது.

ஆகவே அது போன்ற எந்த செயல்களிலும் இந்த அரசு ஈடுபடக் கூடாது… இப்பொழுது இருக்கக்கூடிய 5362 கடைகளும் மூட வேண்டுமே தவிர  புதிதாக எந்த ஒரு பகுதிக்கும்… அல்லது எந்த ஒரு இடத்திலும்  மது விற்பனை செய்வதற்கு அனுமதி அளிப்பதோ அல்லது அனுமதிப்பதை  எந்த விதத்திலும் கூடாது என்பதை நாங்கள் எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.