நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….  இந்த அவையிலே பல உறுப்பினர்கள் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வருகிறார்கள்.  கிராமத்திலிருந்து ஒருவர் வெளிநாடு செல்லும் போது வருட கணக்கில் அவர்கள் வெளிநாட்டில் அதை பார்த்தேன், இதை பார்த்தேன் என்று கூறுவார்கள். இது இயல்பானது தான்.

கிராமவாசிகள் டெல்லியை கூட பார்த்திருக்க மாட்டார்கள்…  அப்படிப்பட்டவர்கள் அமெரிக்காவை பற்றி பெருமையாக பேசுவது இயல்பானது தான். வீட்டு மூலையில் ஒரு சிறிய செடியை பயிரிட முடியாதவர்கள் வயலைப் பார்த்து பொறாமைப் படுவது வழக்கம்தானே….  தரையில் இறங்காதவர்கள்…  இன்று தரையில் இறங்கி மக்களின் ஏழ்மையை பார்க்கும் போது அவர்களுக்கு துக்கமாக இருக்கும்.

இந்தியாவின் மோசமான வறுமை நிலையை பற்றி இவர்கள் சித்தரிக்கும் போதெல்லாம் கடந்த 50 ஆண்டுகளாக இவர்கள் தான் ஆட்சி செய்தார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இவர்களது முன்னோர்கள் செய்த செயலால் தான் இந்த நிலைமையில் இருக்கிறது என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் இவர்களது பருப்பு இங்கு வேகாது. அதனால் புதிய புதிய கடைகளை திறக்கிறார்கள் என தெரிவித்தார்.