மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் 59 இடங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மதுரையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் காலி பணியிடம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் மாத சம்பளம் 26 ஆயிரத்து 250 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Primary teacher பணியிடத்திற்கு கட்டாயமாக ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் பி எட் முடித்திருக்க வேண்டும். அதே சமயம் ஆசிரியருக்கு கட்டாயமாக ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு பல பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆசிரியர் பணியிடத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி KENDRIYA VIDYALAYA NO. 2 MADURAI- 625005 என்ற முகவரிக்கு நேரடியாக சென்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://no2madurai.kvs.ac.in/sites/default/files/WALK%20IN%20INTERVIEW%2024%20JUNE%202023.pdf என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.