அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் அந்த நன்றிக்காக தான் தற்போது கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். இதற்கு தற்போது டிடிவி தினகரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 அதிமுக எம்எல்ஏக்களே தவிர பாஜக அல்ல. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார்.

ஆனால் தற்போது இபிஎஸ் அப்பட்டமாக பொய் பேசுகிறார். துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிச்சாமி நன்றியைப் பற்றி பேசுகிறார். ஆட்சியை காப்பாற்றிய 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர் இபிஎஸ். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் அதற்கு முழு காரணமும் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். 2026 தேர்தலில் நான்கு கூட்டணிகள் போட்டியிடும். இந்த முறை அதிமுக தோல்வி அடைந்தால் அதற்கு அமமுக காரணம் கிடையாது. மேலும் அதிமுகவின் தோல்விக்கு முழு காரணமும் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்றார்.