தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 13ம் தேதி, தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தையும் இதே தொகுதியில் தொடங்கியிருந்தார். இது, விஜய் திருச்சி கிழக்கை முக்கியமான தொகுதியாக பார்ப்பதாக கூறப்படுகிறது. திருச்சி என்பது விஜய்க்கு அதிக வரவேற்பு உள்ள பகுதியாகவே கருதப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட பல தனியார் சர்வே முடிவுகள், இத்தொகுதியில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளதைக் காட்டுகின்றன.
இதனிடையே, விஜயோ அல்லது தவெகவின் வேறு எவராக இருந்தாலும், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அதிமுக, திமுக ஆகிய பெரிய கட்சிகளும் தவெகவின் வளர்ச்சியை கவனிக்கத் தொடங்கியுள்ளன.
பொதுமக்களில் உருவாகியுள்ள நம்பிக்கை மற்றும் விஜயின் சமூக ஊடக செல்வாக்கு, இத்தொகுதியில் அவருக்கெதிரான அரசியல் கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, திருச்சி கிழக்கு தொகுதி விஜய்க்கு முதல் வெற்றித் தளமாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றே சொல்லப்படுகிறது.
