அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய கூட்டணி முடிவை வெளியிட்டுள்ளார். “டெல்லி பாஜக தலைமை எல்லாத்தையும் சரி செய்துவிடும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம்.

கூட்டணிக்கு அழைத்தாலும் இனி நான் போக மாட்டேன்” எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், தற்போது அவர் இதுபோன்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தாங்கள் தனித்துப் போட்டியிடும் முடிவாகவே கருதப்படுகிறது.

மேலும், “விஜயும், சீமானும் தனித்துப் போட்டியிட்டாலும், இந்தமுறை அவர்கள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருப்பது எனக்கு தெரியும்” எனவும் தினகரன் சூசகமாகக் கூறியுள்ளார்.

இதன் மூலம், விஜய் தலைமையிலான தவெக அல்லது நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோருடன் கூட்டணி வாய்ப்பு இருப்பதை நியாயப்படுத்துகிறார் எனக் கூறப்படுகிறது. இதனைக் கொண்டு, 2026 தேர்தலில் டிடிவி தினகரன், தவெக அல்லது நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்து புதிய அரசியல் பிணைவு ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.