சென்னை அக்கரையில் இன்று (செப்டம்பர் 16) காலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. முக்கியமான இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் வர முடியவில்லை என தகவல்கள் வெளியான நிலையில், பாஜகவில் உள்ள கருத்து வேறுபாடுகள் மீண்டும் தீவிரமாக பேசப்பட்டது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக அண்ணாமலை சற்று முன்னர் கூட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வந்து சேர்ந்தார். அவரது வருகை, பாஜக கூட்டமைப்பில் உள்ளதாக கூறப்படும் உட்கட்சி மோதலுக்கான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
காய்ச்சல் இருந்தபோதிலும் கட்சிப் பணிக்காக தன்னை அர்ப்பணிக்கிறார் என்பதையும் அவர் இந்த வருகையால் நிரூபித்துள்ளார். இந்த நிகழ்வு, பாஜக ஆதரவாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
