அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான கூட்டணி உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதை அப்பட்டமாக உடைக்கும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “அதிமுக கூட்டணி தர்மத்தை கொஞ்சமும் மதிக்கவில்லை; எங்கள் தேமுதிக கட்சிக்குக் கூட்டணியில் கொடுக்க வேண்டிய உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் அவர்கள் வழங்கவில்லை” எனப் பிரேமலதா மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவின் இந்த அராஜகப் போக்கிற்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை அவர் மேடையிலேயே ஓப்பனாக உடைத்துள்ளது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகக் குறிவைத்துத் தாக்கிய பிரேமலதா, “எங்கள் தேமுதிக கட்சி கூட்டணியை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஒற்றை ஆளாகத் தீவிரமாக நினைத்தார்” என அதிரடியான அணு குண்டு தகவலை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த உள்நோக்கம் கொண்ட நகர்வுகளையும், அதிமுகவின் துரோகத்தையும் பிரேமலதா விஜயகாந்த் ஓப்பனாகத் தோலுரித்துக் காட்டியுள்ள இந்த விவகாரம், அதிமுக – தேமுதிக கூட்டணிக் கணக்குகளை மொத்தமாக மாற்றி அமைத்துள்ளதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதங்களை அனல் பறக்க விட்டுள்ளது.