தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மிக முக்கியமான செயல்வீரர்கள் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் நடந்த பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்து விஜய் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது, எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக ஜெயநாதன் விவகாரம் மற்றும் கரூரில் சிபிஐ விசாரணை வரை நீடித்த துயரச் சம்பவங்கள் குறித்து அவர் மௌனம் காத்தது விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் அவர் பேசப்போகும் ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு “கூட்டணியா? அல்லது தனித்துப் போட்டியா?” என்பது குறித்த இறுதி முடிவை விஜய் இன்று அறிவிப்பார் எனத் தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் விஜய், இன்றைய கூட்டத்தில் தனது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வை அதிரடியாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
