தமிழக அரசுப் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.
அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத் தேர்வுகள் வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறை காலம் முடிவடைந்த பின், ஜனவரி 5-ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
