இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகள் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணிகள் என்றால் அனைவருக்கும் கொள்ளை பிரியமாக இருக்கும். அதிலும் அவர்களுடன் குழந்தைகள் சேர்ந்து கொண்டால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை.

சில நேரங்களில் நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் மின்னல் வேகத்தில் வந்து காப்பாற்றும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நாய் ஒன்று சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும் குழந்தையை கடிக்கச் சென்றுள்ளது. இதனை எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருந்த பூனை மின்னல் வேகத்தில் அதனை தாக்கியுள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.