இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு பெண் சிங்கத்துடன் ஒரே தட்டில் உணவு சாப்பிடும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சிங்கத்திற்கு உணவாக பச்சை இறைச்சி மற்றும் சமைத்த இறைச்சி ஒரே தட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிங்கம் பச்சை இறைச்சியை சாப்பிடும் அதே நேரத்தில் அருகில் அமர்ந்து பெண் ஒருவர் சிறிது அச்சம் இல்லாமல் சமைத்த இறைச்சியை சாப்பிடுகிறார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அச்சமடைய வைத்துள்ளது.