பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் நடந்த ஒரு செயல் இப்போது எக்ஸ் (X) தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசூதி ஒன்றில் தொழுகை நடந்து கொண்டிருந்த நேரத்தில், பைக்கில் வந்த ஒரு நபர் சில குழந்தைகளை அழைத்து வந்து, மசூதிக்கு முன்பாக நின்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடுமாறு வற்புறுத்தியுள்ளார். குழந்தைகளும் அவர் சொன்னது போலவே முழக்கமிட்டிருக்கிறார்கள்.

​இதைப் பார்த்த ஒரு முஸ்லிம் நபர் அங்கிருந்தவர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்ப முன்வந்தபோது, அந்தப் பைக்கில் வந்த நபர் குழந்தைகளை அங்கேயே தவிக்கவிட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார். “ஒருவேளை இந்தத் தூண்டுதலுக்கு முஸ்லிம்கள் எதிர்வினையாற்றியிருந்தால், அவர்கள் வன்முறையாளர்களாக முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்” என அந்தப் பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

பிஞ்சு குழந்தைகளிடம் மதவெறியைத் தூண்டி, அவர்களைத் தவிக்கவிட்டுச் சென்ற அந்த நபரின் செயல் பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.