குழந்தைகளையும் முதியவர்களையும் தெருநாய்கள் கடிக்கும் கொடூர சூழ்நிலையை நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்று ஆக்ரோஷம் காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அடியோடு அகற்ற பிறப்பித்த தனது முந்தைய அதிரடி உத்தரவைத் தளர்த்த அதிரடியாக மறுத்துவிட்டது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, “பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை அதிகாரிகள் புறக்கணிக்க முடியாது” என்று சாடியதோடு, பல மாநிலங்கள் தங்களது உத்தரவைச் சரியாக மதிக்காததற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என ‘பகீர்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு திருப்பமாக, கடுமையாக நோய்வாய்ப்பட்ட அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தான வெறிநாய்களைக் ‘கருணைக்கொலை’ (Euthanasia) செய்வதை அதிகாரிகள் தாராளமாகப் பரிசீலிக்கலாம் என்று நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) விதிகளை முறையாக அமல்படுத்தாத மாநிலங்களுக்குக் கடுமையான டோஸ் விட்ட நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை உடனடியாக அகற்றி கோசாலைகளுக்கு மாற்ற வேண்டும் என NHAI மற்றும் மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
