சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில், சிறுமி ஒருவருக்குக் குளிர்ச்சியான தண்ணீருக்குப் பதிலாகத் தவறுதலாகச் சுடுதண்ணீர் வழங்கப்பட்டதில், அச்சிறுமியின் வாய் வெந்து மிகுந்த பாதிப்புக்குள்ளானது. சிறுமியின் தந்தை ரிதுவான் முகமது இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது மகளின் தண்ணீர் பாட்டிலில் ஊழியர்கள் ஊற்றிக் கொடுத்தது சுடுதண்ணீர் என்று தெரியாமல், அதை அந்தச் சிறுமி குடித்ததால் அவருக்குக் காயம் ஏற்பட்டது. “தன் மகள் வலியால் துடித்ததைப் பார்த்தபோது இதயம் நொறுங்கிவிட்டது” என்று பதிவிட்டுள்ள அவர், தற்போது சிறுமி நலமாக இருந்தாலும், தண்ணீர் பாட்டிலைப் பார்த்தாலே அவர் பயப்படுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் விசாரணை நடத்தி வருவதோடு, இனிவரும் காலங்களில் ஊழியர்கள் பாதுகாப்பாகச் செயல்படுவதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
View this post on Instagram
“>
ஊழியர்களின் தவறு ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகளுக்கு எதைக் கொடுக்கும் முன்பும் பெற்றோர்கள் அதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
