கும்பம் ராசி அன்பர்களே,

இன்று பெருமை மிகுந்த நாளாக இருக்கும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.    பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். விரயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  சேமிப்பை அதிகரிக்க பாருங்கள். சிந்திக்காமல் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். முயற்சியால் வெற்றி பெற முடியும். இந்த நாள் மிகவும் நல்ல நாளாக தான் இருக்கும்.

சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அனைவரிடமும் அமைதியாக நடந்து கொள்வது சிறப்பு. வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீடு மாற்றும் இடமாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்கள் இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.

ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். கையில் காசு பணம் புரளும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். சக மாணவர்களால் மகிழ்ச்சி ஏற்படும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5, 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்