கும்பம் ராசி அன்பர்களே

இன்று அனைவர் மீதும் அன்பாக இருப்பீர்கள். நீண்ட நாள் ஆசை இன்று  நிறைவேறும். யாருடைய தவறையும் சுட்டிக்காட்ட வேண்டாம். சந்திராஷ்டமம் முடியாததால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். வேடிக்கை கூட பார்க்க வேண்டாம். யார் சார்பாகவும் பஞ்சாயத்து பேச வேண்டாம். வியாபாரம் நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று தர்ம சங்கடமான சூழலை சமாளிக்க வேண்டியதிருக்கும். திடீர் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சந்திராஷ்டம் முடியும் வரை பெரியவர்களின் சொல் கேட்டு நடப்பது நல்லது. இன்று பெண்களுக்கு கோபங்கள் வெளிப்படும். காரியங்களில் ஓரளவுதான் முன்னேற்றம் இருக்கும். தேவைகள் அதிகரிக்கும். சந்திராஷ்டமத்தின் காரணமாக தேவையில்லாத வார்த்தைகளை பேசுவீர்கள்.

இன்று கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. சில நிகழ்வுகள் உங்கள் மனதை பாதிக்கும். இன்று மாணவர்கள் நல்ல பெயரை பெறுவீர்கள். துணிச்சலுடன் சில பணிகளில் ஈடுபடுவீர்கள்.  இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  ஒன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்   : பச்சை மற்றும் நீல நிறம்