மகரம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக வெற்றி வாகை சூட முடியும். புது புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகளும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் கனவுகள் நினைவாகும். மூத்த சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். சாதகமான நல்ல பலன் கண்டிப்பாக வரக்கூடும். மாற்று மதத்தினர் கைகொடுத்து உதவுவார்கள். உத்தியோகம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டியது இருக்கும். அனைவரும் ஆச்சரியப்படும்படி நடந்து கொள்வீர்கள்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கிவிடும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். இன்று பெண்கள் இரவு நேர பயணத்தை மேற்கொள்ளும் போது கவனமாக இருங்கள்.

இன்று எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் சாதிக்கும் வல்லமை உள்ளது. விளையாட்டு துறையாக இருந்தாலும் கல்வி துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும். முழு முயற்சியினால் வெற்றி பெற முடியும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :   7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்  :   சிவப்பு மற்றும் நீல நிறம்