எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாளடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார் என்ற ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவுக்கு இணையாக யாரும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று எண்ணி சீரியல் குழு புதிதாக குணசேகரன் அண்ணன் கதாபாத்திரத்தை கொண்டு வந்து கதைக்களத்தில் மாற்றங்களுடன் சீரியலை ஒளிபரப்பு செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.