சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலை தொடர்கிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 98,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 13494 ரூபாய்க்கும், ஒரு சவரன் 107952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 210 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.