தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் அவர்கள் தங்கள் இறுதி முடிவை எடுப்பதாக இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஓபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் தற்போது இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஒரு மணி நேரமாக நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இதைத்தடர்ந்து இன்று அவர் டெல்லிக்கு செல்வதால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
