பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற போலீசார், சவுக்கு சங்கரை வீட்டிலேயே கைது செய்தனர். இதனையடுத்து அவர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ளதாக தாம் வெளியிட்ட தகவல்களுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கைது சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
