சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,16,640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,905 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,27,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,00,000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
