உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான சந்தேகத்தால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், வீட்டில் இருந்த டாய்லெட் கிளீனரை எடுத்து அந்த பெண் தன் கணவன் மீது ஊற்றியுள்ளார். இதில் கணவன் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​இந்தத் தாக்குதலின் போது அந்தப் பெண்ணிற்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஆசிட் வீச்சுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனைகள் வன்முறையாக மாறுவது அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.