துருக்கி நாட்டின் ஓர்டு மாகாணத்தில் உள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, நகராட்சி அலுவலகத்திற்குள் அரிவாளுடன் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த மேயர் அலுவலகச் செயலாளர் ஆடெம் டெமிர்கேல் என்பவரைத் தலையில் குறிவைத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

​இந்தக் கொடூரத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து தப்பியோடிய அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட ஊழியர் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி சிகிச்சையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு அலுவலகத்திற்குள்ளேயே நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.