சென்னை விளாம்பாக்கத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைச்சர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தற்போது பேருந்து இயக்கம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து துறை, தினசரி இயக்கக்கூடிய 1124 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 612 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.