தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அறிவித்தனர். இருப்பினும் அவர்களை பாஜக மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வதாக கூறப்படும் நிலையில் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதில் அமமுக கட்சிக்கு 6 சீட்டு ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யாத நிலையில் எப்படி தொகுதி பங்கீடு செய்ய முடியும். இது தொடர்பாக பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி இதனை யாரும் நம்ப வேண்டாம். மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும் பொங்கலுக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறினார்.