தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 8012120115என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.