சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 98,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13,473 ரூபாய்க்கும், ஒரு சவரன் 107952 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று கிராமுக்கு 4 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 211 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,11,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
