பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், இன்று அதிகாலை சென்னையில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.

அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வேகத்தடை மீது ஏறி, சாலையோர மரத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்தின் வீரியத்தில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், துக்ளக் நல்வாய்ப்பாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி விசாரணையைத் தொடங்கினர். “அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம்” என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்த துக்ளக், தற்போது விபத்தில் சிக்கியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.