சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்ட வரலட்சுமி தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் அருகே உள்ள கண்ணகி நகரில் தேங்கி நின்ற மழைநீர் காரணமாக பரிதாபகரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், சாலையில் தேங்கி நின்ற நீரில் மின்சாரம் பாய்ந்ததால் திடீரென அதில் சிக்கி உயிரிழந்தார். சென்னை மாநகரில் அதிக மழை பதிவான துரைப்பாக்கம் அருகே இந்த விபத்து நடந்தது அங்குள்ள மக்களை உலுக்கி உள்ளது. மின்சார பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
