சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 28-வது மாடியில் உள்ள வீட்டில் வாழும் கன்று குட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த கன்று குட்டி பிறந்து 3 மாதங்கள் ஆன போது நீலாங்கரையில் உள்ள தெருவில் வேகமாக வந்த கார் மோதி காயமடைந்தது.

அப்போது விலங்குகள் நல ஆர்வலரான தேஜஸ்வி ரங்கன் என்பவர் கன்றுக்குட்டியை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து முறையான மருத்துவ சிகிச்சை அளித்து பராமரித்து வந்தார். அந்த கன்று குட்டிக்கு மிஸ்டர் அலெக்ஸ் என பெயர் வைத்தார். அடுக்குமாடி குடியிருப்பின் 28-வது மாடியில் உள்ள வீட்டில் சுற்றி திரியும் கன்று குட்டி தினமும் பங்கிங்ஹாம் கால்வாயின் காட்சியை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் கன்று குட்டி பெரிதாகும்போது லிப்ட் வசதிக்கு என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் அலெக்ஸ் மிகவும் அழகானவர். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என கமெண்ட் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sai Vignesh (@saianimalactivist)