திமுக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது பவானி திமுக நகர செயலாளர் பா.சி நாகராஜன். இவரது மறைவுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

கட்சி நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் மிகவும் சிறந்தவர் என்று அவருக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின் கால் நூற்றாண்டு காலம் திமுகவில் பயணித்த அவருக்கு சிறந்த நகரச் செயலாளர் விருது வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுக கட்சியின் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.