தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் விஜய் கட்சியில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்னும் பலர் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதி ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் விஜயராஜ் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இவரது தலைமையில் அதிமுக கிளை கழக செயலாளர்கள் 50 பேர் விஜய் கட்சியுடன் இணைந்தனர். மேலும் இவர்கள் அனைவரும் செங்கோட்டையன் ஆலோசனை பெற்று கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.