ஈரோடு மாவட்டத்தில்அனிதா, அம்பிகாபதி, இந்துஜா, ஜோதி, மோகன்ராஜ், வடிவேல் ஆகியோர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை பொன்னியந்தல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்தக் கோர விபத்தில் ஜோதி, மோகன்ராஜ், வடிவேல், ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இந்துஜா, அம்பிகாபதி மற்றும் அனிதா ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுனர் ஜலாலுதினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.