தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், திருச்சி, வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் தாக்கம் இருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதோடு வெயிலின் தாக்கத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்தியாவிலேயே நேற்று அதிக வெப்பம் பதிவான பகுதிகளில் சேலம் 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.